/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்
/
சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : அக் 05, 2025 02:03 AM

கூவத்துார்:வாலோடை கிராமத்தில் மதுராந்தகம்- கடலுார் நெடுஞ்சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
கூவத்துார் அருகே வாலோடை கிராமத்தில் மதுராந்தகம்-கடலுார் இடையே செல்லும் 30 கி.மீ., நெடுஞ்சாலை உள்ளது. இது நெற்குணப்பட்டு, காத்தான்கடை, ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாகும்.
தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையில் கடந்து செல்கின்றன,
இந்த சாலையில் பாரங்கள் ஏற்றிக்கொண்டு அதிகபடியான கல்குவாரி லாரிகள் கடந்து செல்வதால், சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு சாலை சேதமடைந்து உள்ளது.
இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆகையால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.