/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
/
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து அபாயம்
ADDED : ஏப் 17, 2025 01:02 AM

மறைமலைநகர்:உத்திரமேரூர் தாலுகாவிற்க்கு உட்பட்ட சாலவாக்கம், பட்டா, திருமுக்கூடல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கல்குவாரி மற்றும் கல் அரவை நிலையங்களில் இருந்து தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை ,பாலுார், - சிங்கபெருமாள் கோவில் சாலை வழியாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இந்த லாரிகள் தார் பாய் மூடாமல், அதிக பாரம் ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகள் தார்பாய் மூடாமல் வேகமாக செல்கின்றன. லாரி முழுதும் எம்.சாண்ட் மணல், ஜல்லிகற்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள் பிரேக் போடும் போது அதில் இருந்து ஜல்லி கற்கள் சாலையில் விழுந்து புழுதி பறக்கின்றன.
கண்காணிக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். இதன் காரணமாக, விதிமீறல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வீதிமீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.