/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை வளைவில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
/
சாலை வளைவில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலை வளைவில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
சாலை வளைவில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
ADDED : ஜன 17, 2025 01:10 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை ஒட்டி , பாலுார் ரயில் நிலையம் அருகில் ரயில்வே துறையின் குடிநீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ,சரக்கு கனரக வாகனங்கள் வந்து தண்ணீர் பாட்டில்களை ஏற்றிச் செல்கின்றன. இவ்வாறு வரும் சரக்கு வாகனங்கள் நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படுவதால், அந்த சாலையை பயன்படுத்தி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த நெடுஞ்சாலையில் இரவில் இருள் சூழ்ந்து உள்ளது. அந்த நேரங்களில் சாலை வளைவில் நிறுத்தப்பட்டு உள்ள, சரக்கு வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
கடந்த மாதம் பாலுார் பகுதியை சேர்ந்த நபர் விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டு, வாகனம்
முழுதும் சேதமடைந்தது. எனவே இந்த பகுதியில் சரக்கு வாகனங்களை நிறுத்த போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.