/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் உலர்த்தப்படும் நெல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
/
நெடுஞ்சாலையில் உலர்த்தப்படும் நெல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
நெடுஞ்சாலையில் உலர்த்தப்படும் நெல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
நெடுஞ்சாலையில் உலர்த்தப்படும் நெல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : ஏப் 14, 2025 11:51 PM

பவுஞ்சூர், தேவாதுார் பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லை, மதுராந்தகம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உலர்த்தப்படுவதால், வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் பகுதியில் தச்சூர் - மதுராந்தகம் செல்லும் 12 கி.மீ., துாரம் உடைய மாநில நெடுஞ்சாலை உள்ளது.
மாரிபுத்துார், காவாதுார், தேவாதுார், முருகம்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம் செல்ல, இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர்.
தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன.
தேவாதுார் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், நெல் பயிரிடப்படுகிறது.
ஆனால், இந்த பகுதியில் நெல் உலர்த்த முறையான நெற்களம் வசதி இல்லை. இதனால் விவசாயிகள், அறுவடை செய்யப்படும் நெல்லை, மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர்.
இந்த நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கண்காணித்து, முறையான நெற்களம் வசதி ஏற்படுத்த நடவடிக்கை வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.