/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 நாள் வேலை வழங்க கோரி மொறப்பாக்கத்தில் சாலை மறியல்
/
100 நாள் வேலை வழங்க கோரி மொறப்பாக்கத்தில் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க கோரி மொறப்பாக்கத்தில் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க கோரி மொறப்பாக்கத்தில் சாலை மறியல்
ADDED : பிப் 01, 2025 12:27 AM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு மொறப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில், கருணாகரவிளாகம், புதுார் இரு கிராமங்கள் உள்ளன.
அங்கு, 1, 000க்கும் மேற்பட்ட,100 நாள் வேலை திட்ட அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த ஒரு சில மாதங்களாக, 100 நாள் வேலை இன்றி கிராம மக்கள் உள்ளனர்.
அதனால், வேலை வழங்க கோரி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த மக்கள், நேற்று, மதுராந்தகம், உத்திரமேரூர் மாநில நெடுஞ்சாலையில், தடம் எண் : டி 14 உத்திரமேரூர் செல்லும் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரை மணி நேர போராட்டத்திற்கு பின், அதிகாரிகள் யாரும் வராததால், கலைந்து சென்றனர்.