/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜல்லி பெயர்ந்து சாலை சேதம் கனரக வாகனங்களால் பாதிப்பு
/
ஜல்லி பெயர்ந்து சாலை சேதம் கனரக வாகனங்களால் பாதிப்பு
ஜல்லி பெயர்ந்து சாலை சேதம் கனரக வாகனங்களால் பாதிப்பு
ஜல்லி பெயர்ந்து சாலை சேதம் கனரக வாகனங்களால் பாதிப்பு
ADDED : ஜன 11, 2025 11:26 PM

மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தாசரி குன்னத்துார் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் ஜல்லி பெயர்ந்து, பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
இந்த சாலையை கொளத்துார், தாசரி குன்னத்துார் ஆகிய கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பகுதிகளுக்குச் சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2016ல் பிரதம மந்திரி சாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த சாலை, ஜல்லி ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிக அளவில் சென்று வருவதால், கடுமையாக சேதமடைந்து பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லும் போது, அடிக்கடி ஜல்லி கற்கள் குத்தி, டயர்கள் பஞ்சராகி விடுகிறன. இதனால், இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாலையில் உள்ள பள்ளங்களால் முதியவர்கள், கர்ப்பிணியர், நோயாளிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த கிராமத்திற்கு வர தயங்குகின்றன.
மேலும், இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்ச உணர்வுடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

