/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் சாலை பராமரிப்பு நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனம்
/
கூடுவாஞ்சேரியில் சாலை பராமரிப்பு நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனம்
கூடுவாஞ்சேரியில் சாலை பராமரிப்பு நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனம்
கூடுவாஞ்சேரியில் சாலை பராமரிப்பு நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தனம்
ADDED : மார் 14, 2024 08:01 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில், நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனப் போக்கை கையாளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும் மேடும், பள்ளமுமாக உள்ளது. பெருங்களத்துார் முதல் சீனிவாசபுரம் வரையிலும், மறு மார்க்கத்தில், சீனிவாசபுரத்தில் இருந்து பெருங்களத்துார் வரையிலும் ஆங்காங்கே பள்ளங்களும், மண் குவியல்களும் உள்ளன.
இப்பகுதிகளுக்கு உட்பட்ட சாலையில், நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பு பணியை மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகின்றனர்.
இது குறித்து, சமூக நல ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
செங்கல்பட்டில் இருந்து மறைமலை நகர் வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
ஆனால், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் இருபுறமும், எந்த விதமான பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை.
இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சாலை சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

