/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 07, 2025 07:59 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேற்று, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் விபத்தில்லா பயணம், தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றி நடத்தல், உடனடி உதவி செய்வோம் உயிர்களை காப்போம் என வலியுறுத்தப்பட்டது.
அச்சிறுபாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து துவங்கிய பேரணி பஜார் வீதி, தேசிய நெடுஞ்சாலை, சந்தை பகுதி வழியாக சென்று முடிந்தது.
இதில் மதுராந்தகம், அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலை துறையினர், மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர், அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

