/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை கடும் சேதம் இரும்பேடில் அவதி
/
சாலை கடும் சேதம் இரும்பேடில் அவதி
ADDED : மார் 21, 2025 02:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பெரிய இரும்பேடு கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள தெருவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது.
அதன் பின், இதுவரை சாலை செப்பனிடப்படாததால், சிமென்ட் சாலை ஆங்காங்கே துண்டித்து, குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மழை நேரத்தில் சாலையில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.