/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்விளக்குகள் இல்லாத சாலை திருப்போரூர் அருகே அச்சம்
/
மின்விளக்குகள் இல்லாத சாலை திருப்போரூர் அருகே அச்சம்
மின்விளக்குகள் இல்லாத சாலை திருப்போரூர் அருகே அச்சம்
மின்விளக்குகள் இல்லாத சாலை திருப்போரூர் அருகே அச்சம்
ADDED : மே 06, 2025 12:18 AM

திருப்போரூர்,
மேட்டுத்தண்டலம், செங்கல்பட்டு சாலையை ஒட்டி மின் விளக்குகள் அமைக்காததால், இரவில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்க, உடனே இச்சாலையில் மின்கம்பங்கள் நட்டு, மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் கிராமம், திருப்போரூர் - செங்கல்பட்டு சாலையை ஒட்டி அய்யப்பன் கோவில், குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இங்கு சாலையை ஒட்டி இருந்த மின்கம்பம், 10 ஆண்டுகளுக்கு முன் வாகனம் மோதி உடைந்தது.
இதனால், சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின்கம்பியும் அகற்றப்பட்டது.
தற்போது, 200 மீட்டர் துாரத்திற்கு மின்கம்பம் இல்லாததால், மின்விளக்குகளும் பொருத்தப்படவில்லை.
இதனால், அங்கு இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த வழியாக அய்யப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், கோவில் அடுத்து அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்றுவரும் தொழிலாளர்கள், தொழிற்சாலைக்கு அருகே அமைந்துள்ள எடையான்குப்பம் இருளர் பகுதி மக்கள் என, அனைவரும் அச்சத்துடன், 200 மீட்டர் சாலையைக் கடந்து சென்றுவருகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் இருள் சூழ்ந்து இருப்பதால், குற்ற சம்பவங்கள் நடக்கும் சூழல் உள்ளது.
அதேபோல், இருள் சூழ்ந்து இருப்பதால் சாலையோரம் இரவில் கார், கனரக வாகனங்களை நிறுத்துகின்றனர்.
அவர்கள் ஓய்வு எடுக்க நிறுத்துகின்றனரா அல்லது குற்ற சம்பவங்களில் ஈடுபட நிறுத்துகின்றனரா என தெரியாமல், பகுதிவாசிகள் அச்சமடைகின்றனர்.
எனவே, குற்ற சம்பவங்களை தடுக்க, இந்த சாலையில் இரண்டு மின்கம்பம் பொருத்தி, மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.