/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாதியில் நிற்கும் சாலை பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
பாதியில் நிற்கும் சாலை பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பாதியில் நிற்கும் சாலை பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பாதியில் நிற்கும் சாலை பணி; விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 14, 2024 06:29 AM

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேவதி நகர் சாலை முதல், கோதாவரி நகர் சாலை வரை, சேதமான சாலையை சீரமைப்பதற்காக, 30.48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், சாலை பராமரிப்பு பணிகள், கோதாவரி நகரில் இருந்து துவங்கப்பட்டு, கோதாவரி நகர் முழுதும் நிறைவடைந்ததை தொடர்ந்து, ரேவதி நகர் சாலையில் பணிகள் பாதியிலேயே நிற்கிறது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் இருந்தது.
இது தொடர்பாக, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மனு வழங்கியதன் அடிப்படையில், சாலையை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ஒரு பகுதி சாலையை சீரமைத்து விட்டு, மற்றொரு பகுதியில் துவங்கிய நிலையிலேயே இதுவரை பணிகள் நிறைவு பெறாமல் பாதியில் நிற்கின்றன.
எனவே, ரேவதி நகர் பிரதான சாலை பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.