/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்து நடந்த சாலையில் தடுப்புகள் அமைப்பு
/
விபத்து நடந்த சாலையில் தடுப்புகள் அமைப்பு
ADDED : ஜன 13, 2024 12:53 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், ஆத்துார் பழவேலி பகுதியில், ஒரக்காட்பேட்டை செல்லும் மேம்பாலம் சந்திப்பு உள்ளது.
இந்த மேம்பாலத்தை கடந்து, தினமும் சாலவாக்கம், கண்டிகை, மாம்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள், செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். மேம்பாலம் -- காஞ்சிபுரம் சாலை சந்திப்பு பகுதியில், சில மாதங்களாக அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர்.
கடந்த மாதம், தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவன், கல்லுாரி வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
இதையடுத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும், இந்த பகுதியில் செங்கல்பட்டு தாலுகா போலீசார், சாலையின் இருபுறமும் 'பேரிகார்டு' அமைத்து எச்சரித்துள்ளனர்.