/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் திருக்கழுக்குன்றத்தில் இடையூறு
/
சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் திருக்கழுக்குன்றத்தில் இடையூறு
சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் திருக்கழுக்குன்றத்தில் இடையூறு
சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் திருக்கழுக்குன்றத்தில் இடையூறு
ADDED : நவ 15, 2024 01:27 AM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் பேருந்து நிலைய வளாகத்தை ஒட்டி, செங்கல்பட்டு சாலை கடக்கிறது.
திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கடைகள், வங்கிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு, இவ்வழியே செல்கின்றனர்.
காலை, மாலை நேரங்களில், அதிக அளவிலான வாகனங்கள் நெரிசலுடன் கடக்கின்றன. பேருந்து நிலையம், சாலை இடையேயுள்ள குறுகிய இடத்தை ஆக்கிரமித்து, நடைபாதை பழக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன.
அது மட்டுமின்றி, சாலையோரங்களில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. எதிர்புறத்திலும், கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுகின்றன.
அதனால், இருசக்கர வாகன பயணியர், வேகமாக செல்லும் கார், கனரக வாகனம் ஆகியவற்றுக்கு வழிவிட்டு ஒதுங்க, சாலையோரம் இடமில்லை.
பழக்கடைகளிலும், கடைகளுக்கு முன் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களிலும், மோதி விழும் அபாயம் உள்ளது. பாதசாரிகள் நடக்கவும் இடமில்லை. அதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, போக்குவரத்து பாதிப்பு, பயணியர் அபாயம் கருதி, இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.