/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கலெக்டர் ஆபீஸ் அருகே சாலையோர பூங்கா பணி துவக்கம்
/
செங்கை கலெக்டர் ஆபீஸ் அருகே சாலையோர பூங்கா பணி துவக்கம்
செங்கை கலெக்டர் ஆபீஸ் அருகே சாலையோர பூங்கா பணி துவக்கம்
செங்கை கலெக்டர் ஆபீஸ் அருகே சாலையோர பூங்கா பணி துவக்கம்
ADDED : ஜன 28, 2025 11:46 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், சாலையோர பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பகுதியில், செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், சாலையோர பூங்கா மற்றும் சாலை அமைக்க, 25 லட்சம் ரூபாய் நிதியை, கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு, அரசு ஒதுக்கீடு செய்தது.
இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். அதன் பின், கடந்த சில நாட்களுக்கு முன், சாலை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த பூங்காவில் அழகிய பூச்செடிகள், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பூங்கா அமைக்கும் பணியை ஒரு மாதத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.