ADDED : ஜன 19, 2025 02:29 AM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை சாலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், சாலை ஓரம் மண்ணரிப்பால் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டது.
கடமலைப்புத்துாரில் இருந்து பெரும்பேர் கண்டிகை செல்லும் சாலை உள்ளது.
இப்பகுதியில், அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
பெரும்பேர் கண்டிகை பகுதிக்கு செல்வோர் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கிய சாலையாகும்.
கடந்த மாதம் பெய்த, வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலையில் வெள்ளம் பாய்ந்து ஓடியதால், சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டு இருந்தது.
தற்போது, மிகப்பெரிய பள்ளம் உள்ளதால், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் மது பிரியர்கள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே, ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை அடுத்து, பெரும்பேர் கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி ஏற்பாட்டில், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக சாலை ஓரம் இருந்த பெரிய பள்ளத்தில் மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது.

