/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவில் தேருக்கு கூரை
/
கந்தசுவாமி கோவில் தேருக்கு கூரை
ADDED : மார் 28, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 15ம் தேதி, திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைந்தது.
இதில் முக்கிய விழாவாக, கடந்த 9ம் தேதி தேர்த் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழா நிறைவடைந்த நிலையில், தேரை பாதுகாக்க கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தேரின் பக்கவாட்டு பகுதிகளில் இரும்பு சட்டங்கள் பொருத்தி, முழுமையாக மூடும் வகையில் கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.