ADDED : டிச 08, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி பகுதியில் உள்ள தமிழக வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு பிளாஸ்டிக் பையுடன் நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அயனாவரம் 'சிபி' பிளாக் பகுதியை சேர்ந்த ரவுடி ஹரிஷ்குமார் 28, என்பதும், அவரிடம் விற்பனைக்காக 1.8 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிந்தது. பின் அவரை கைது செய்தனர்.

