/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை ---------ரவுடி, ஆட்டோ டிரைவர் கைது
/
இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை ---------ரவுடி, ஆட்டோ டிரைவர் கைது
இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை ---------ரவுடி, ஆட்டோ டிரைவர் கைது
இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை ---------ரவுடி, ஆட்டோ டிரைவர் கைது
ADDED : பிப் 07, 2025 12:14 AM
சென்னைநள்ளிரவில், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை தந்த, ரவுடி உட்பட இரண்டு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, 19 வயது இளம்பெண், கடந்த 3ம் தேதி இரவு, 11:00 மணியளவில், சேலத்தில் இருந்து பஸ்சில், சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்துள்ளார்.
மர்ம நபர்கள்
அவரை நள்ளிரவில் மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, வண்டலுார் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி தயாளன், 45, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வன்,56 ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரவாயல் அருகே, போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பிக்க ஓட்டம் பிடித்ததால், இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி தயாளன் மீது, 12க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவர், சில ஆண்டுகளுக்கு முன் ஆட்டோ ஓட்டி வந்தார்.
அப்போது, சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வரும் பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இருவரும் மது குடித்துள்ளனர். அவர்கள், விலைமாதுகளை தேடி, கோயம்பேடு பகுதியில் இருந்து, மறைமலை நகர் வரை சென்றுள்ளனர். அங்கிருந்து, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே வந்துள்ளனர்.
அப்போது, பஸ்சுக்கு காத்திருந்த இளம்பெண், தன்னை நோக்கி வந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரிடம், கோயம்பேடு செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவரிடம் அந்த ஆட்டோ ஓட்டுநர், 1,400 ரூபாய் கேட்டுள்ளார். அவ்வளவு ரூபாய் என்னால் தர முடியாது; 400 ரூபாய் தருகிறேன் எனக் கூறியுள்ளார். எனக்கு கட்டுப்படியாகாது என, அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்றுவிட்டார்.
தீவிர விசாரணை
இவர்களின் பேச்சை சற்று துாரத்தில் இருந்து கவனித்த தயாளன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர், இளம்பெண்ணை நோக்கிச் சென்றுள்ளனர்.
அவரிடம், தயாளனை காட்டி, 'கொஞ்ச துாரத்தில் இவரும் இறங்கி விடுவார். நீங்கள், 600 ரூபாய் தாருங்கள்.
'நான் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறக்கி விடுகிறேன்' என, முத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அப்போது, இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி உள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்ததுடன், நெற்குன்றம் அருகே சென்றபோது, அங்குள்ள பாலம் அருகே, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தயாளன் கூறுகிறார்.
ஆனால், தனக்கு மாதவிடாய் என்பதால், பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என, இளம்பெண் கூறுகிறார்.
இரு தரப்பினரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து வருகின்றனர்.
இதனால், தீவிர விசாரணை நடக்கிறது. இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, மேலும் மூவரிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.