/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூப்பர் மார்க்கெட் ஊழியரிடம் சில்லரை தருவதாக ரூ.11,000 பறிப்பு
/
சூப்பர் மார்க்கெட் ஊழியரிடம் சில்லரை தருவதாக ரூ.11,000 பறிப்பு
சூப்பர் மார்க்கெட் ஊழியரிடம் சில்லரை தருவதாக ரூ.11,000 பறிப்பு
சூப்பர் மார்க்கெட் ஊழியரிடம் சில்லரை தருவதாக ரூ.11,000 பறிப்பு
ADDED : ஜன 20, 2025 11:37 PM
சென்னை, கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை, 20வது அவென்யூவில், 'ரெடி' சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு, ராஜா, 20, என்பவர் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை சூப்பர் மார்க்கெட் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தன்னிடம் 10 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் இருப்பதாகவும், உங்களுக்கு சில்லரை தேவைப்பட்டால் கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு ராஜா சில்லரை காசு வேண்டும் எனக் கூறியதையடுத்து, அந்த நபர் கடைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சில்லரை தன் கடையில் இருப்பதாக கூறி, ராஜாவை அவரது பைக்கில் அழைத்து சென்றார்.
வடபழனி சிவன் கோவில் அருகே சென்றபோது, 'பணத்தை கொடுங்கள். நான் சில்லரை எடுத்து வருகிறேன்' என, கூறியுள்ளார். ஆனால், ராஜா பணம் தர மறுக்கவே, அவரிடம் இருந்த 11,000 ரூபாயை பறித்து தப்பினார்.
இது குறித்து கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.