/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு சிற்ப கல்லுாரி மேம்பாட்டுக்கு ரூ.11.22 கோடி
/
அரசு சிற்ப கல்லுாரி மேம்பாட்டுக்கு ரூ.11.22 கோடி
ADDED : நவ 02, 2025 01:27 AM
மாமல்லபுரம்: அரசு கட்டட, சிற்பக்கலை கல்லுாரியில் புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட, 11.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ், மாமல்லபுரத்தில் அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரி இயங்குகிறது.
இக்கல்லுாரியில், 30 ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள், புதிதாக கட்டப்பட்ட விடுதி கட்டடம் ஆகியவை பராமரிப்பின்றி சீரழிந்துள்ளன.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதும், கட்டடங்கள் மட்டும் பெயரளவிற்கு சீரமைக்கப்பட்டன.
இதற்கிடையே நிர்வாக அலுவலகம், வகுப்பறை கட்டடங்கள் கட்ட, பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து மதிப்பிட்ட நிலையில், கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் சாமிநாதன், இங்கு பார்வையிட்டார்.
இப்பணிகளுக்காக தற்போது, 11.22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை பணிகளை துவக்க ஒப்பந்தம் கோரி உள்ளது.

