/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சூதாடிய 14 பேரிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்
/
சூதாடிய 14 பேரிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்
ADDED : பிப் 11, 2025 07:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை:இ.சி.ஆர்., கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், நேற்று முன்தினம் இரவு, ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தன.
நீலாங்கரை போலீசார் சென்று விசாரித்தனர். விசாரணையில், கிண்டி மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த, சுரேஷ், 36, மணி, 40, பாண்டியன், 36, உள்ளிட்ட 14 பேர் என தெரிந்தது. போலீசார், அவர்களை கைது செய்து, 1.38 லட்சம் ரூபாய் மற்றும் 9 சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

