/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டூரில் பூங்கா அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு
/
குண்டூரில் பூங்கா அமைக்க ரூ.45 லட்சம் ஒதுக்கீடு
ADDED : டிச 25, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: குண்டூரில் பூங்கா அமைக்க செங்கல்பட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகராட்சியில், குண்டூர் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி செய்ய பூங்கா அமைத்து தர வேண்டும் என, கலெக்டர், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.,ஏ., வரலட்சுமி தொகுதி மேம்பாட்டு நிதியில் பூங்கா அமைக்க, 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். பூங்கா பணிக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் பணி துவங்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

