/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டை உடைத்து ரூ.45,000 'ஆட்டை'
/
பூட்டை உடைத்து ரூ.45,000 'ஆட்டை'
ADDED : அக் 27, 2024 08:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த பூங்கா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி மகேஸ்வரி, 44. இவர், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார்.
மதியம் உணவு இடைவேளையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 45,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.