/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணம் வாங்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
/
பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணம் வாங்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணம் வாங்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணம் வாங்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜன 29, 2025 07:02 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 20 அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி நிதியில், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், மாணவர்கள் விளையாடுவதற்கு உபகரணங்கள் தேவை என, காஞ்சிபுரம் தி.மு.க., எம்.பி.,யிடம், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், 2024-25ம் ஆண்டு நிதியில், மாவட்டத்தில் திருப்போரூர், கேளம்பாக்கம், செம்பாக்கம், படாளம், குண்ணங்கொளத்துார், அச்சிறுப்பாக்கம், தொழுப்பேடு, எலப்பாக்கம், மொறப்பாக்கம்.
சோத்துப்பாக்கம், பொலம்பாக்கம், திருவந்தவர், அணைக்கட்டு, வெண்ணங்குப்பட்டு, சூணாம்பேடு, செய்யூர், கூவத்துார், திருக்கழுக்குன்றம், வெங்கப்பாக்கம், மானாமதி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்காக, தலா 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு உபகரணங்கள் வாங்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத. இதற்கான அறிக்கையை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், எம்.பி., செல்வம் அளித்தார்.
அதன் பின், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இத்திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி, அதன் நகலை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

