/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி; மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி; மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு
ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி; மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு
ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி; மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : மார் 18, 2025 12:38 AM

மறைமலை நகர்; காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, திருத்தேரி பகுதியை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர், குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவின் விபரம்:
சிங்கபெருமாள் கோவில், பகத்சிங் நகர் பகுதியை சேர்ந்த நளினி என்பவர், தங்கள் பகுதியில் உள்ள, 28க்கும் மேற்பட்டோரிடம் அணுகி, 10, 15, 20 மாதங்கள் என, தனியாக சீட்டு பிடிப்பதாக கூறினார்.
அவரை நம்பி, மாத மாதம் பணம் கட்டி வந்த நிலையில், தவணை முடிந்தும் பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார்.
அவரிடம் சென்று கேட்ட போது, தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி, ஆபாசமாக திட்டி அனுப்பி விட்டார்.
எங்கள் பகுதியை சேர்ந்த, 28 பேருக்கு மேல், 50 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளனர்.இது குறித்து, கடந்த ஏப்., மாதம், தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில், அனைவரும் புகார் அளித்தோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும், போலீசார் தரப்பில் எடுக்கப்படவில்லை. எங்களை ஏமாற்றிய நபர், சுதந்திரமாக, சந்தோஷமாக உள்ளார்.
தினக்கூலி வேலை செய்து, கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஏமாற்றி வருகிறார். எனவே, நாங்கள் இழந்த சீட்டு பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.