/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
4 ஆண்டுகளில் ரூ.14 கோடி ஆன்லைன் மோசடி ...253 சைபர் வழக்கு !:போலீஸ் நடவடிக்கையில் ரூ.93.28 லட்சம் மீட்பு
/
4 ஆண்டுகளில் ரூ.14 கோடி ஆன்லைன் மோசடி ...253 சைபர் வழக்கு !:போலீஸ் நடவடிக்கையில் ரூ.93.28 லட்சம் மீட்பு
4 ஆண்டுகளில் ரூ.14 கோடி ஆன்லைன் மோசடி ...253 சைபர் வழக்கு !:போலீஸ் நடவடிக்கையில் ரூ.93.28 லட்சம் மீட்பு
4 ஆண்டுகளில் ரூ.14 கோடி ஆன்லைன் மோசடி ...253 சைபர் வழக்கு !:போலீஸ் நடவடிக்கையில் ரூ.93.28 லட்சம் மீட்பு
ADDED : மே 28, 2024 11:25 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்ததாக, சைபர் கிரைம் போலீசில், 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில், 13.16 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில், தற்போது வரை 93.28 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு, 2021ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றனர்.
மளிகைக்கடை முதல் பெரிய அளவிலான வங்கி பரிவர்த்தனை வரை, இணைய வழியிலேயே செய்ய முடிவதால், மக்களுக்கு அலைச்சல், காலவிரயம் தவிர்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால், பெரும்பாலானோர் தங்கள் மடிக்கணினி, மொபைல் போன் வாயிலாகவே பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர்.
பொதுமக்களை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் சைபர் கிரைம் குற்றவாளிகள், அவர்களின் ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை கேட்டுப் பெறுகின்றனர்.
அதன் வாயிலாக, அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் கையாடல் செய்கின்றனர்.
வீடியோ கால் வாயிலாக மற்றவர்களைத் தொடர்பு கொண்டு, ஆபாசமான முறையில் ஆசைகளைத் துாண்டி, பேசியதை பதிவு செய்வது போன்ற குற்றச்செயல்களில், வடமாநில இளைஞர்களே அதிகமாக ஈடுபடுகின்றனர்.
வேலை வாய்ப்பு மற்றும் தொழில்ரீதியாகவும் இத்தகைய மோசடி நடக்கிறது.
மாவட்டத்தில், கல்பாக்கம், மாமல்லபுரம், மகேந்திரா வேர்ல்ட் சிட்டி, செய்யூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில், சைபர் கிரைம் போலீசார், 253 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில், ஆன்லைன் வாயிலாக அதிக லாபம் கிடைப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும், பெண்கள், இளைஞர்களிடம் ஆர்வத்தை துண்டி, வடமாநில வாலிபர்கள், இளைஞர்கள் தங்களின் வங்கி கணக்கில் லாவகமாக பணத்தை பெறுகின்றனர்.
அதன்பின், அவர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொள்ளும்போது, மொபைல் எண் சுவிட்ச் ஆப் செய்யப்படுகிறது.
வடமாநில வாலிபர்கள், தமிழகக்தைச் சேர்ந்தவர்களின் மொபைல் போன்களுக்கு ஒரு வீடியோ அனுப்பி வைக்கின்றனர். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ய சொல்கின்றனர்.
அதன்பின், ஆன்லைன் வாயிலாக, 2,000 ரூபாய் செலுத்தச் சொல்கின்றனர். இதன் வாயிலாக, ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என கூறுகின்றனர். இதை நம்பி, தமிழக இளைஞர்கள், பெண்கள் பணத்தை செலுத்துகின்றனர்.
அதன்பின், சைபர் கிரைம் குற்றவாளிகள், ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தியவர்களுக்கென, போலியான இணையதளம் ஒன்றை துவக்குகின்றனர்.
இதன் வாயிலாக பல லட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ளும் மோசடி பேர்வழிகள், திடீரென இணையதளத்தை முடக்கிவிட்டு, அமைதியாக வெளியேறி விடுகின்றனர்.
அதன்பின் தான், பணம் செலுத்தியவர்களுக்கு, தாங்கள் பணத்தை இழந்தது தெரிய வருகிறது. தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார், சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடித்து, அவர்களிடம் பணத்தை பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.