/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சுதர்சன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை கைவிட வேண்டும். பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இவர்களை போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.

