/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுச்சுவரில்லாத ஆலத்துார் சிட்கோ தொழிலாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
/
சுற்றுச்சுவரில்லாத ஆலத்துார் சிட்கோ தொழிலாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவரில்லாத ஆலத்துார் சிட்கோ தொழிலாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
சுற்றுச்சுவரில்லாத ஆலத்துார் சிட்கோ தொழிலாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜன 23, 2025 12:35 AM
திருப்போரூர், ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு, திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியில், 200 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது.
பிரதான, பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டதால், குறுகிய காலத்திலேயே, 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு வந்தன.
தற்போது, இத்தொழிற்பேட்டையில், 32 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இங்கு 20,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த வளாகத்திற்கு, முழுமையான சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. நுழைவாயில் பகுதி உட்பட ஆங்காங்கே, திறந்தவெளி பகுதியாக உள்ளது.
இந்த சிட்கோ வளாகத்தில், வடமாநில தொழிலாளர்கள் உட்பட பலர் பணிபுரிந்து வரும் நிலையில், திறந்தவெளியாக உள்ளதால், தொழிலாளர்கள் உள்ளனரா அல்லது சம்பந்தமில்லாத நபர்கள் செல்கிறார்களா என சந்தேகம் ஏற்படுகிறது.
ஏற்கனவே, சிட்கோ வளாகத்தில் சில பகுதியில் மின் விளக்கு இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து, தொழிலாளர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், முறையான பாதுகாப்பு இல்லாமல் சிட்கோ வளாகம் இருப்பது, தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது---.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குற்ற சம்பவங்களை தடுக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். மேலும், பாதுகாவலர்கள் நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

