/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'சாகர் கவச்' ஒத்திகை கடலோரம் கண்காணிப்பு
/
'சாகர் கவச்' ஒத்திகை கடலோரம் கண்காணிப்பு
ADDED : நவ 21, 2025 03:15 AM
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில், 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை துவக்கப்பட்டது.
பயங்கரவாதிகள் முன்பு, கடல் வழியே நாட்டிற்குள் ஊருவி, மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதை தடுக்க, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நிகழாமல் தடுக்க, 'சாகர் கவச்' என்ற பயங்கரவாத கண் காணிப்பு மற்றும் தடுப்பு ஒத்திகை, கடலோர பகுதிகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடலோர பாதுகாப்பு படை சார்பில் நேற்று ஒத்திகை துவக்கப்பட்டு, இன்றும் நடக்கிறது.
போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், கல்பாக்கம் அணுசக்தி தொழிற்வளாகம் அருகில் உள்ள மாமல்லபுரம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். கடலோர சாலையில் செல்லும் வாகனங்களை மடக்கி, சோதனை நடத்துகின்றனர்.
கல்பாக்கத்தில் ராணுவத்தினர், சி.ஐ.எஸ்.எப்., வீரர்கள் இணைந்து அணுசக்தி வளாக பகுதிகளில், சந்தேக நபர்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

