/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வங்கியில் ரூ.1.76 கோடி கையாடல் விற்பனை மேலாளர், தாய் கைது
/
வங்கியில் ரூ.1.76 கோடி கையாடல் விற்பனை மேலாளர், தாய் கைது
வங்கியில் ரூ.1.76 கோடி கையாடல் விற்பனை மேலாளர், தாய் கைது
வங்கியில் ரூ.1.76 கோடி கையாடல் விற்பனை மேலாளர், தாய் கைது
ADDED : ஜூன் 09, 2025 02:14 AM

சென்னை:சென்னை, அமைந்தகரை, ஹெச்.டி.எப்.சி., வங்கியில், மண்டல மேலாளராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன், 48. இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
ஹெச்.டி.எப்.சி., வங்கியின் அமைந்தகரை கிளையில், திருவொற்றியூரைச் சேர்ந்த மகேந்திரகுமார், 34, என்பவர், விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
அவர், தன் தாயின் பெயரில் எல்.ஐ.சி., பாலிசி முதிர்வு தொகை சான்றிதழ்களில், போலியாக தொகையை மாற்றம் செய்து, பலமுறை ஓ.டி., லோன் தொகை பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில் மகேந்திரகுமார் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி, 1.76 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளது கணக்கு சரிபார்க்கும்போது தெரியவந்தது.
எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மகேந்திரகுமார், அவரது தாய் விஜயலட்சுமியுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நேற்று, போலீசார் கைது செய்தனர்.