/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமத்துவ பொங்கல் விழா சக்தி நகரில் கோலாகலம்
/
சமத்துவ பொங்கல் விழா சக்தி நகரில் கோலாகலம்
ADDED : ஜன 13, 2024 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலப்பாக்கம்:ஆலப்பாக்கம் சக்தி நகரில், சமத்துவ பொங்கல் விழா, நேற்று நடந்தது.
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சக்தி நகரில், சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சமத்துவ பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டி, நேற்று நடந்தது.
சமத்துவ பொங்கலை, ஊராட்சி தலைவர் பரிமளா, ஒன்றிய கவுன்சிலர் நந்திமதி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், வனக்குழு தலைவர் திருமலை, வார்டு உறுப்பினர் சந்திரகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அதன்பின், கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முதல் மூன்று பரிசுகளும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஆருதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

