/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
7 மணி நேர வேலை வழங்க கோரி சாம்சங் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
7 மணி நேர வேலை வழங்க கோரி சாம்சங் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
7 மணி நேர வேலை வழங்க கோரி சாம்சங் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
7 மணி நேர வேலை வழங்க கோரி சாம்சங் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 21, 2025 11:29 PM

ஸ்ரீபெரும்புதுார், ஏழு மணி நேர வேலை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சாம்சங் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்,சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும்தொழிலாளர்கள், சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொழிற்சாலைக்குள் பதற்றமான சூழலை உருவாக்கியதாக, 23 பேரை தொழிற்சாலை நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது.
அவர்களுக்கு மீண்டும் வேலை கோரி, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மார்ச் 8 முதல், மீண்டும் பணிக்கு திரும்ப, சாம்சங் நிர்வாகம் கடிதம் வழங்கியது.
தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், ஊதிய உடன்பாடு, ஏழு மணி நேர வேலை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியிறுத்தி, சுங்குவார்சத்திரம் சந்திப்பு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாம்சங் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முத்துகுமார் தலைமையில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.