/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலுாரில் சாலை விபத்து துாய்மை பணியாளர் பலி
/
பாலுாரில் சாலை விபத்து துாய்மை பணியாளர் பலி
ADDED : ஜன 05, 2024 09:12 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பாலுார் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 41. ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை, பாலுார் அடுத்த நத்தமேடு பேருந்து நிறுத்தம் அருகே, வேலைக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், விஜயலட்சுமி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாலுார் போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.