/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துாய்மை பணியாளர் சங்க ஒன்றிய கூட்டம்
/
துாய்மை பணியாளர் சங்க ஒன்றிய கூட்டம்
ADDED : ஜூலை 02, 2025 09:52 PM
திருப்போரூர்:திருப்போரூர் அருகே துாய்மை பணியாளர்கள் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சிறப்பு நிலை பேரூராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம், கண்ணகப்பட்டு பகுதியில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், புதிய நிர்வாகிகளாக சங்க தலைவர் தேவி, செயலர் சதீஷ்குமார், பொருளாளர் மஞ்சுளா, துணை தலைவர் பன்னீர்செல்வம், சேகர், துணை செயலர் செல்வகுமார், ஜெயராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஒன்றியம் மற்றும் நகர் பகுதிகளை துாய்மையாக பாதுகாத்தல், துாய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துதல் குறித்து பேசப்பட்டது.
நிறைவில், தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து நிர்வாகத்திற்கு மனு அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் பிரச்னைகள் மீது தீர்வு காணவில்லை என்றால், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.