/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் ஸ்கூட்டர் ஆட்டை
/
திருப்போரூரில் ஸ்கூட்டர் ஆட்டை
ADDED : பிப் 18, 2025 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜராஜன், 39.
இவர் தன் 'டி.வி.எஸ்.ஸ்கூட்டி பெப்' ஸ்கூட்டரை, வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று காலை 7:00 மணியளவில் ஸ்கூட்டரை எடுக்க வந்தபோது, காணாமல் போனது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், தாழம்பூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து, புகார் அளித்துள்ளார்.
புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், மர்ம நபர்கள் இருவர் ஸ்கூட்டரை திருடிச் சென்றது தெரிந்தது.
போலீசார் அந்த மர்ப நபர்களை தேடி வருகின்றனர்.