/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது அதிகரிப்பு
/
கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது அதிகரிப்பு
ADDED : ஜன 20, 2025 03:45 AM

மாமல்லபுரம்,:கடலிலிருந்து, இனப்பெருக்கத்திற்காக கடற்கரை வரும் கடல் ஆமைகள், படகில் சிக்கி இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்து வருகிறது.
கடலில் வாழும் நீர்வாழ் உயிரினங்களில், ஆமை குறிப்பிடத்தக்கது. அவை ஆழ்கடலிலிருந்து கடற்கரைக்கு வந்து, மணலில் ஆழமான குழிதோண்டி, அதில் குவியலாக முட்டையிட்டு, குஞ்சுகள் பொரிக்கின்றன.
டிச., - மார்ச் காலத்தில், இனப்பெருக்கம் செய்கின்றன. இக்காலமான தற்போது, கடற்கரைக்கு ஏராளமான ஆமைகள் படையெடுக்கின்றன.
கடற்கரையை நோக்கி வரும் போது அல்லது கரையில் முட்டையிட்டு விட்டு கடலுக்கு திரும்பும் போது, மீன்பிடி படகில் மோதியும், வலையில் சிக்கியும் காயமடைந்து இறக்கின்றன. அவ்வாறு இறக்கும் ஆமைகள் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கடலுார், ஆலம்பரைகுப்பம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில், தற்போது ஏராளமாக கரையில் ஒதுங்குகின்றன.
மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை, குழி தோண்டி புதைத்து விடுகின்றனர்.
ஆனால், ஆள் இல்லாத பகுதியில் ஒதுங்கும் ஆமைகள், பல நாட்கள் கிடந்து அழுகி, துர்நாற்றம் வீசுகின்றன. இந்நிலையில், ஆமைகள் இவ்வாறு இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.