/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உங்களை தேடி; உங்கள் ஊரில்'
/
திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உங்களை தேடி; உங்கள் ஊரில்'
திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உங்களை தேடி; உங்கள் ஊரில்'
திருக்கழுக்குன்றம் தாலுகாவில் உங்களை தேடி; உங்கள் ஊரில்'
ADDED : செப் 19, 2024 12:55 AM

மாமல்லபுரம்:திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதியில், உங்களை தேடி; உங்கள் ஊரில்' திட்ட முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. சப் - கலெக்டர் நாராயணசர்மா, தாசில்தார் ராதா மற்றும் பல்வேறு துறையினர் பங்கேற்றனர்.
மேலேரிப்பாக்கம் கீழவேடு பகுதியில், தேவி சரஸ்வதி இந்தியா தன்னார்வ நிறுவன குழந்தைகள் நல விடுதியில் ஆய்வு செய்து, 64 மாணவ - மாணவியர் தங்கி பயில்வது குறித்து, கலெக்டர் கேட்டறிந்தார்.
புல்லேரி ஊராட்சியில், கனிமவள திட்ட நிதி 14.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அங்கன்வாடி கட்டுமானப் பணியை பார்வையிட்டு, உணவின் தரம், எடையை பரிசோதித்தார்.
அதே ஊரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 28.93 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக குளம் உருவாக்கப்படுவதை பார்வையிட்டார். நீர்நிலை கரைகளில், 100 பனை விதைகள், 30 பனங்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார்.
திருக்கழுக்குன்றம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு கலவை சாதம், முட்டை பரிமாறி, அவரும் சாப்பிட்டார்.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி புதிய அலுவலக கட்டடம், அரசு மருத்துவமனை புதிய கட்டடம் கட்டுமானம், வார சந்தை, வேதகிரீஸ்வரர் கோவில் கிரிவல பாதை அடிப்படை வசதிகள், உழவர் சந்தை ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.
மாமல்லபுரத்தில் இயங்கும் வெண்பா முதியோர் இல்லத்தில், முதியோர் பராமரிப்பு, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்து, பிஸ்கட், உடை உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
சதுரங்கப்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார மையம், கல்பாக்கத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான மேகாத்வா பள்ளி, ஆயப்பாக்கத்தில், கடலை உடைப்பு தொழிலகம் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அரசுத் துறையினருடன் ஆலோசித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.