/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தில் அக்டோபர் முதல் சீசன் துவக்கம்
/
வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தில் அக்டோபர் முதல் சீசன் துவக்கம்
வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தில் அக்டோபர் முதல் சீசன் துவக்கம்
வேடந்தாங்கல் பறவை சரணாலயத்தில் அக்டோபர் முதல் சீசன் துவக்கம்
ADDED : செப் 30, 2024 05:52 AM

மதுராந்தகம், : மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இது, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டதாகும். தற்போது, ஏழு அடிக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது.
தற்போது, பர்மா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின், பல மாநிலங்களில் இருந்து நத்தைகொத்தி நாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்ட பறவைகள் தங்கியுள்ளன.
குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன. டிச., ஜன., பிப்., மாதங்களில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
மார்ச், ஏப்., மே மாதங்களின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.
வடகிழக்கு பருவமழை துவங்கிய பின், ஏரியில் முழு கொள்ளளவு நீர் நிறைந்து காணப்படும்.
அவ்வகையில், அக்டோபர் மாதம், இரண்டாவது வாரத்தில் பறவைகளின் வரத்து அதிகரித்து காணப்படும்.
சீசன் துவங்கியவுடன் சுற்றுலா பயணியரின் நலன்கருதி, அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.