/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பருவகால பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
பருவகால பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 30, 2025 12:26 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பருவகால பணியாளர்கள் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, அரசு நெல் கொள்முதல் நிலையங்கள், தற்காலிகமாக இயங்கி வருகின்றன.
இங்கு, தற்காலிகமாக அனைத்து பருவகால பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்திட வேண்டும்.
பருவகால பணியாளர்களை தரக்கட்டுப்பாடு கள ஆய்வு என்ற பெயரில் மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். பருவ கால நெல் கொள்முதல் பணியாளர்களுக்கு, பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.