/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068
/
செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068
செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068
செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068
ADDED : செப் 30, 2025 12:26 AM
செங்கல்பட்டு;செங்கல்பட்டு மாவட்டத்தில், மறு சீரமைப்புக்குப் பின், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 3,068 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான சினேகா தலைமையில், மறைமலை நகர் நகராட்சி கூட்ட அரங்கில், சமீபத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதி ஹெலன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், இந்தாண்டு ஜன., 6ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 27.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 13.57 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள். 13.89 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். 481 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், 2,826 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 242 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் தற்போது, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 3,068 ஆக உயர்ந்துள்ளதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி சினேகா தெரிவித்துள்ளார்.