/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்கள் மீது லாரி ஏறி காவலாளி உயிரிழப்பு
/
கால்கள் மீது லாரி ஏறி காவலாளி உயிரிழப்பு
ADDED : ஜூலை 16, 2025 01:07 AM

கூடுவாஞ்சேரி:வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சரியில், கல் அரவை ஆலை காவலாளியின் கால்கள் மீது லாரி ஏறியதில் அவர் பலியானார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அருளம்பாடி கிராமம், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த வீரமுத்து, 48. இவர், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள கல் அரவை ஆலை ஒன்றில், காவலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலை முடிந்து, மாலை 5:00 மணியளவில், நல்லம்பாக்கம் -- கீரப்பாக்கம் சாலை ஓரத்தில் அமர்ந்து, மது அருந்தி உள்ளார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று, அவரது இரண்டு கால்கள் மீதும் ஏறி இறங்கி, நிற்காமல் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த வீரமுத்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி வீரமுத்து உயிரிழந்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

