/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் பாதியை காணோம் 20 ஆண்டாக கவலைக்கிடம்
/
சாலையில் பாதியை காணோம் 20 ஆண்டாக கவலைக்கிடம்
ADDED : அக் 06, 2024 01:03 AM

சித்தாமூர்,
சித்தாமூர் அருகே மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு நெடுஞ்சாலையில் இருந்து பெருக்கரணை காலனி பகுதிக்கு செல்லும், 3 கிலோமீட்டர் தூரமுள்ள தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையை பெருக்கரணை காலனி, பூங்குணம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஏராளமான வாகனங்கள் இச்சாலை வழியாக செல்கின்றன.
இச்சாலை 20 ஆண்டுகளாக சேதமடைந்து இருப்பதால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், மழைக்காலத்தில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.