/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 18, 2024 03:29 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம், நாராயணபுரத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
அதற்கு முன்னதாக, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் இதர வாஸ்து சாந்தியுடன் முதல் கால பூஜை நடந்தது.
தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை பூர்ணாஹுதியுடன் மஹா தீபாராதனையும், மாலை 6:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை அஷ்டபந்தனம் சாத்துதல், விக்கிரக பிரதிஷ்டையும் நடந்தது.
நேற்று காலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், 6:30 மணிக்கு மணி யாத்ரா தானமும் நடந்தன. தொடர்ந்து புனித நீர் கலசங்களுடன் வலம் வந்த சிவாச்சாரியார்கள், கோபுரத்திற்கு சென்றனர்.
அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் தெளித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இதில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.