/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை சின்னமுத்து மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின்றி அவதி
/
செங்கை சின்னமுத்து மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின்றி அவதி
செங்கை சின்னமுத்து மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின்றி அவதி
செங்கை சின்னமுத்து மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடையின்றி அவதி
ADDED : டிச 06, 2025 06:01 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு சின்னமுத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடையின்றி பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சி, ராட்டிணங்கிணறு பகுதியில் ஏற்கனவே இருந்த பேருந்து நிறுத்தத்தில் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நின்று செல்லும்.
அப்போது, பயணியரை இறக்கி, ஏற்றும் போது, இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அத்துடன், அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வந்தன.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இந்த பேருந்து நிறுத்தத்தை மாற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைத் துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, இந்த பேருந்து நிறுத்தம் செங்கல்பட்டு சின்ன முத்துமாரியம்மன் கோவில் அருகே மாற்றப்பட்டு உள்ளது.
தற்போது மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
ஆனால், இங்கு நிழற்குடை இல்லாமல் முதியோர், பெண்கள், கல்லுாரி மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, சின்னமுத்து மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

