/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட கபடி போட்டி மாமல்லை அணி முதலிடம்
/
செங்கை மாவட்ட கபடி போட்டி மாமல்லை அணி முதலிடம்
ADDED : நவ 18, 2025 04:07 AM

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட கபடி போட்டியில், மாமல்லபுரம் அணியினர் முதலிடத்தை வென்றனர்.
மாமல்லபுரம் எம்.எஸ்.டி.ஏ., விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் ஆகியவை இணைந்து, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில், மாவட்ட அளவிலான சிறுவர் கபடி போட்டியை, இரண்டு நாட்கள் நடத்தின.
செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளிலிருந்து, 30 அணிகளைச் சேர்ந்த 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில், மாமல்லபுரம் கடல் மல்லை அணியினர் முதலிடமும், வெட்டுவாங்கேணி சின்னாண்டிகுப்பம் அணியினர் இரண்டாமிடமும் வென்றனர்.
மேலும், வாயலுார் உய்யாலிகுப்பம் அணியினர் மூன்றாமிடமும், மாமல்லபுரம் கொக்கிலமேடு அணியினர் நான்காமிடமும் வென்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை ஆகியவை வழங்கப்பட்டன.

