/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை செங்கை போலீசார் விசாரணை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை செங்கை போலீசார் விசாரணை
ADDED : அக் 18, 2024 09:02 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகில் உள்ள மளிகை கடையில், பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது, பின்னால் இருந்து, சிறுமியின் முகத்தை மூடிய இரு மர்ம நபர்கள், அருகில் இருந்த புதர் பகுதிக்கு சிறுமியை துாக்கிச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் வரும் சத்தத்தை கேட்ட மர்ம நபர்கள், சிறுமியை புதருக்குள்ளேயே விட்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து, சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.