/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாயை சுற்றி தேங்கும் கழிவுநீர் சிறுங்குன்றத்தில் தொற்று நோய் அபாயம்
/
குடிநீர் குழாயை சுற்றி தேங்கும் கழிவுநீர் சிறுங்குன்றத்தில் தொற்று நோய் அபாயம்
குடிநீர் குழாயை சுற்றி தேங்கும் கழிவுநீர் சிறுங்குன்றத்தில் தொற்று நோய் அபாயம்
குடிநீர் குழாயை சுற்றி தேங்கும் கழிவுநீர் சிறுங்குன்றத்தில் தொற்று நோய் அபாயம்
ADDED : ஏப் 16, 2025 01:48 AM

திருப்போரூர்:சிறுங்குன்றம் கிராமத்தில் குடிநீர் குழாய் சுற்றிலும் கழிவுநீர் தேங்குவதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில், தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்த தொட்டிக்கு கீழே, குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் குழாயிலிருந்து, அப்பகுதி இருளர் குடியிருப்பு மக்கள், குடிநீர் பிடித்துச் செல்கின்றனர். அருகே அமைந்துள்ள அங்கன்வாடி குழந்தைகளும் குடிநீர் பருகிச் செல்கின்றனர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், விவசாயிகள் இங்கு வந்து குடிநீர் பிடித்து குடிக்கின்றனர்.
இந்நிலையில், குடிநீர் குழாயைச் சுற்றிலும் பள்ளம் இருப்பதால், குழாயிலிருந்து குடிநீர் பிடிக்கும் போது வெளியேறும் நீர், அந்த பள்ளத்திலேயே தேங்குகிறது.
பள்ளத்திலிருந்து தண்ணீர் வெளியேற வழி செய்யாததால், நாளுக்கு நாள் தண்ணீர் தேங்கி கழிவுநீராக மாறுகிறது.
இதனால், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கழிவுநீர் தேங்கிய பள்ளத்தில் குடிநீர் குழாய் இருப்பதால், அங்கு சென்று குடிநீர் பிடிக்க அனைவரும் சிரமப்படுகின்றனர்.
எனவே, மக்களின் நலன் கருதி, குடிநீர் குழாயைச் சுற்றி தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும்.
மேலும் குழாயைச் சுற்றி தண்ணீர் தேங்காத வகையில் மேடான பகுதியாக அமைக்கவும் அல்லது தண்ணீர் வெளியேறும் வகையில் வழிவகை செய்யவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

