/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீரப்பாக்கத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
/
கீரப்பாக்கத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
கீரப்பாக்கத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
கீரப்பாக்கத்தில் கழிவுநீர் தேக்கம் தொற்று நோய் பரவும் அபாயம்
ADDED : அக் 30, 2024 01:50 AM

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில், கழிவுநீர் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாயை முறையாக துார் வாராததால், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேக்கம் அடைந்துள்ளது. இதனால், கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்கி, தெரு சாலையில் வழிந்தோடுகிறது.
சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
இது குறித்து, அப்பகுதியினர் தெரிவித்ததாவது.
இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை முறையாக பராமரிக்காததால், தேக்கங்கி வழிந்தோடி துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம். இப்பகுதியில் உள்ள கால்வாயை சீரமைத்து, கழிவுநீர் சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.