/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
/
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : ஜன 31, 2025 12:45 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் -கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி, சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து, துர்நாற்றத்துடன் சாக்கடையாக, சாலையில் வாய்க்கால் போல ஓடுகிறது .
இதன் அருகில் மளிகை கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஜவுளிக்கடை உள்ளிட்டவைகள் அதிகம் உள்ளன. இங்கு தினமும் அதிகமானவர்கள் நடந்து செல்கின்றனர்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையில் பெருக்கெடுத்து, ஓடும் கழிவு நீரில் மிதித்து செல்லும் அவல நிலை உள்ளது.
இது குறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையில் நீண்ட நாட்களாக , கழிவுநீர் துர்நாற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணுகு சாலையை சீரமைக்காமலும், மழைநீர் வடிகால் வாயை சீரமைக்காமலும் உள்ளதால் கழிவுநீர் ஜி.எஸ்.டி., சாலையில் செல்கிறது.
நாங்கள் அதை சீரமைக்க வேண்டி, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தோம். அவர்கள் இது நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் வருவதால், அதை நாங்கள் சீரமைக்க முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
எனவே துர்நாற்றத்துடன் செல்லும் கழிவுநீரால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து,
கால்வாய் அமைத்து அதில் சீராக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி துணை தலைவர் லோகநாதன் கூறியதாவது:
மின்வாரிய அலுவலகம் அருகில் உள்ள, மழைநீர் வடிகால் வாயில் இருந்து, கழிவுநீர் துர்நாற்றத்துடன் சாலையில் செல்கிறது. இது நகராட்சி கட்டுப்பாட்டில் இல்லை. இது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் வருகிறது.
அதை சீரமைக்கும் பொறுப்பு நெடுஞ்சாலைத்துறைக்கு உள்ளது. நகராட்சி சார்பில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

