/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மருத்துவமனை நுழைவாயிலில் கழிவுநீர் கால்வாய்
/
மருத்துவமனை நுழைவாயிலில் கழிவுநீர் கால்வாய்
ADDED : அக் 31, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:  மதுராந்தகம் அரசு மருத்துவமனை நுழைவாயில் பகுதியில், கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாய், சேதமடைந்து இருந்தது. இதனால், அவசர கால 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, நகராட்சி பொது நிதி 7.50 லட்சம் ரூபாயில், கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

